டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்… முக்கிய செய்தி…..

டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்… முக்கிய செய்தி…..

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் சாலையோரம் முகாமிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

இதேவேளை டெல்லி டிராக்டர் பேரணியின் போது வன்முறையில் ஈடுபட்ட 152 பேரை இதுவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II