உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் வெளியானது: மார்க் ஜூக்கர்பெர்க் முன்னேற்றம்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் வெளியானது: மார்க் ஜூக்கர்பெர்க் முன்னேற்றம்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலில், அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெஸாஸ் 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி (இந்திய ரூபாய் மதிப்பில்) சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

2வது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தொடர்ந்து நீடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு 6 லட்சத்து 18 ஆயிரம் கோடி (இந்திய ரூபாய் மதிப்பில்) ஆகும்.

இந்நிலையில், 3வது இடத்தில் இருந்த Berkshire Hathaway நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வாரன் பபெட்டை, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

மார்க்கின் சொத்து மதிப்பு பேஸ்புக்கின் பங்கு உயர்ந்ததால், 2.4 சதவிதம் அதிகரித்து உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது 3வது இடத்தை பிடித்துள்ளார். மார்க் ஜூக்கர்பெர்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 5.61 லட்சம் கோடி (இந்திய ரூபாய் மதிப்பில்) ஆகும்.

3வது இடத்தில் இருந்த வாரன் பபெட்டின் வயது 87 என்பதும், மார்க் ஜூக்கர்பெர்க்கின் வயது 34 தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Shabesh