பிரபல செம்பருத்தி சீரியலில் புதிதாக இணைந்த நடிகை..! எந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் தெரியுமா?

பிரபல செம்பருத்தி சீரியலில் புதிதாக இணைந்த நடிகை..! எந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் தெரியுமா?

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் தான் செம்பருத்தி, இந்த தொடர்க்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகம்.

மேலும் இந்த தொடரில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் கார்த்திக் ராஜ், இவர் இந்த தொடரில் இருந்து விலகிக்கொள்ள தற்போது அக்னி என்பவர் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி அசோக் குமாரும் நீக்கப்படவே ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் தற்போது உமா கதாபாத்திரத்தில் நடிகை துர்கா நடிப்பதாகவும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி நடிகை பிரியா ராமனுடன் அவர் செம்பருத்தி ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.


ஆசிரியர் - Editor II