பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தந்தை, மகள் அடுத்தடுத்து மரணம்.. கதறும் குடும்பத்தினர்

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தந்தை, மகள் அடுத்தடுத்து மரணம்.. கதறும் குடும்பத்தினர்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தந்தை, மகள் பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காளையார்குறிச்சியை சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மனைவி சந்திராவும் (48) ஒருவர்.

இந்தநிலையில் அதே ஆலையில் பணியாற்றி வந்த சந்திராவின் தந்தை பொன்னுச்சாமியும் (75) வெடிவிபத்தில் பலத்த தீக்காயம் அடைந்து, சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் அவர் நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் காளையார்குறிச்சி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெடி விபத்தில் இறந்த முதியவர் பொன்னுச்சாமியின் மனைவி மாரியம்மாள் (70) சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அதே போல் சந்திராவின் மகன் இருளப்பன் மற்றும் உறவினர்கள் கண்ணீர் சிந்தியபடி இருந்துள்ளனர்.

ஆசிரியர் - Editor II