உறுதியானது ஆரவ் ஓவியா ஜோடியின் காதல்

உறுதியானது ஆரவ் ஓவியா ஜோடியின் காதல்

நடிகை ஓவியாவும் ஆரவ்வும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வருகையில் அதனை உறுதிப்படுத்துவது போல புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

ஓவியாவின் உண்மையான காதலால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியே பிரபலமானது என்றுகூட கூறலாம். பிக்பாஸ் தொடங்கிய முதல் சீசனில் தனது உண்மையான நேர்மையான குணங்களால் மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் ஓவியா.

ஆரவ் மீதான இவரது காதலும் அதன்பின்னான இவரின் கண்ணீர்துளிகளும் யாராலும் மறக்க முடியாதது. அதன்பின் பல இடங்களில் பொதுவெளிகளில் ஆரவ்வும் ஓவியாவும் சந்தித்து கொண்டாலும் இவர்கள் இருவரும் சகஜமாக பேசி கொண்டனர். அனைத்து வலிகளையும் மறக்கும் பெருந்தன்மை கொண்ட ஓவியா ஆரவ் தந்த காயங்களையும் எளிதில் மறந்து விட்டார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக பல இடங்களில் சுற்றியதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனை உறுதிபடுத்தும் வகையில் ஓவியாவே தனது ட்விட்டர் பக்கத்தில் ஆரவுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

இதனால் அதிர்ந்த பல ரசிகர்கள் ஆரவ் வேண்டாம் என்று பதில் ட்வீட் செய்தனர். சிலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தாய்லாந்தில் ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் கை கோர்த்து ஊரை வலம் வரும் காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்புடன் பகிரப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இருவரும் காதலிப்பதாக நம்பப்படுகிறது. இருப்பினும் மற்ற பிரபலங்களை போலவே இவர்களும் தங்கள் காதலை சில வருடங்களுக்கு மறைக்கலாம் என்று தெரிய வருகிறது.

ஆசிரியர் - Shabesh