திருமணமான 4 நாளில் நடைபெற்ற துயரம்... குளியலறையில் புதுமாப்பிளை செய்த காரியம்

திருமணமான 4 நாளில் நடைபெற்ற துயரம்... குளியலறையில் புதுமாப்பிளை செய்த காரியம்

தமிழகத்தில் திருப்பூரில் திருமணமான ந4 நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருப்பூர் சிறுபூலுவப்பட்டியை அடுத்த கீதாநகர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பஞ்சலிங்கம். இவருடைய மூத்த மகன் விக்னேஷ்குமார் (31).

ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கும், உடுமலையைச் சேர்ந்த வைஷ்ணவிக்கும் கடந்த 22ம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு பின்பு விக்னேஷ்குமார் மனைவியுடன் சிறுபூலுவப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய பஞ்சலிங்கம் தனது மனைவியிடம் விக்னேஷ்குமார் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு மனைவி குளிக்க சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

இதையடுத்து குளிக்க சென்ற பஞ்சலிங்கம் குளியலறை அருகே விக்னேஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இறந்து போன விக்னேஷ்குமாரின் உடலை பார்த்து, அவருடைய மனைவியும், பெற்றோரும் கதறி அழுதனர்.

தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II