கால்பந்து வாழ்க்கையில் மோசமான தருணம்: நெய்மர் வேதனை

கால்பந்து வாழ்க்கையில் மோசமான தருணம்: நெய்மர் வேதனை

உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் நெய்மர், கவுட்டினோ, மார்சிலோ, வில்லியன் போன்ற நட்சத்திர வீரர்களை கொண்ட பிரேசில் 1-2 என பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

பெல்ஜியத்திற்கு எதிரான தோல்வி குறித்து நெய்மர் கூறுகையில் , எனது கால்பந்து வரலாற்றில் இது மிகவும் சோகமான தருணம் என்பதை என்னால் கூற முடியும். இதன் வழி மிகவும் அதிகமானது.

ஏனென்றால், உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைக்க வாய்ப்பு இருந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இந்த முறை அந்த வாய்ப்பு அமையவில்லை என்று கூறியுள்ளார்.

ஆசிரியர் - Shabesh