ஒரு கிலோ ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது!

ஒரு கிலோ ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது!

ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (26) ராகமை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 750 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 15 இலட்சத்திற்கும் அதிக பணத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக தெஹிவளை பிரதேசத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்போது, குறித்த பெண்ணிடம் இருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கபபட்டுள்ளனர்.

ஆசிரியர் - Editor II