ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ஆரி கொடுத்த சர்ப்ரைஸ்... பள்ளியில் தன்னை அடித்தவர்களை திருப்பி அடிக்கமுடியாமல் திணறினாரா?

ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ஆரி கொடுத்த சர்ப்ரைஸ்... பள்ளியில் தன்னை அடித்தவர்களை திருப்பி அடிக்கமுடியாமல் திணறினாரா?

நடிகர் ஆரி ரசிகர்களை சந்தித்து அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ள புகைப்படத்தினையும், காணொளியினையும் தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானதுடன், இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்று டைட்டில் வின்னராகவும் ஆனார்.

இவர் நடிகர், சமூக ஆர்வலர், விவசாயப் பிரியர் என்று பல பெயர்களை வைத்து இவரை அழைக்கலாம்.

பிக்பாஸ் முடிந்து ஆரி தனது ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், தற்போதும் நெல்லை மக்களை சந்தித்து ரசிகர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார்.

அவரது புகைப்படத்தில் போடப்பட்ட ஆட்டோகிராஃபையும், அவருடன் ரசிகர்கள் இருக்கும் காணொளியினையும் தற்போது காணலாம்.

ஆரி பழனியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஆரி, பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருப்பாராம். அதனாலேயே தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அவரால் திருப்பி அடிக்க முடியாது என்ற காரணத்துக்காக ஆரியை திரும்பத் திரும்ப அடிப்பார்களாம். அது அவருக்கு மிகுந்த வருத்தத்தை உருவாக்கியது.

அவர்களை ஒரு நாள் திருப்பி அடித்தே தீருவேன் என தனக்குள் எடுத்த சபதமே, நல்ல உடல் கட்டுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற விதையாய் அமைந்ததாக ஆரி யுவர்ஸ்டோரி தமிழ் உடனான உரையாடலில் தெரிவித்திருந்தார்.


ஆசிரியர் - Editor II