பதுளை நாரங்கல மலையில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

பதுளை நாரங்கல மலையில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

பதுளை நாரங்கல மலையில் முகாமிட்டிருந்தபோது, நேற்றிரவு காணாமல்போன 22 வயது இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறை மற்றும் இராணுவத்தின் கூட்டு நடவடிக்கையில், மலையின் பள்ளத்தாக்கிலிருந்து இன்று மதியம் குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், அவிசாவளை - மானியம பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், நேற்றைய நாளில் 6 நண்பர்களுடன் நாரங்கல மலைக்கு சென்ற நிலையில், இரவு நேரத்தில் அவர்கள் அங்கு முகாமிட்டு தங்கியுள்ளனர்.

இதன்போது, அங்கிருந்து வெளியே சென்ற குறித்த இளைஞன், காணாமல்போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஆசிரியர் - Editor II