பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்த மாஸ்டர்

பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்த மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.

கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படம் வெளியான 16 நாட்களிலேயே ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், திரையரங்கிலும் தொடர்ந்து வரவேற்பு கிடைத்தது. இதனால் வசூலையும் வாரிக் குவித்தது.

இந்நிலையில், மாஸ்டர் படம் வசூலில் ‘பாகுபலி 2’ படத்தை முந்தி உள்ளதாம். இதுவரை தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்கிற மாபெரும் சாதனையை ‘பாகுபலி 2’ நிகழ்த்தி இருந்தது.

தற்போது அந்தச் சாதனையை ‘மாஸ்டர்’ படம் முறியடித்துள்ளதாம். மாஸ்டர் படம் நிகழ்த்தி உள்ள இந்த மாபெரும் சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II