ஒருநாள் கிரிக்கட் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்துவதற்கு அனுமதி

ஒருநாள் கிரிக்கட் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்துவதற்கு அனுமதி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் புனேயில் இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்துவதற்கு அந்த நாட்டின் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அடுத்த மாதம் 23, 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் புனேயில் நடத்தப்படும் போட்டிக்கு பார்வையாளர்களை அனுமதிப்பதன் ஊடாக கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனால், பார்வையாளர்கள் இன்றி நடத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை சார்பில் ஆலோசிக்கப்பட்டது.

போட்டிகளை மும்பைக்கு மாற்றலாம் என்ற தகவலும் வெளியானது.

இந்தநிலையில், புனேயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 ஒருநாள் போட்டிகளையும் பார்வையாளர்கள்; இன்றி நடத்துவதற்கு மகாராஷ்டிர மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது

ஆசிரியர் - Editor II