காதலன் எடுத்த விபரீத முடிவால் காதலி செய்த அதிர்ச்சி செயல்.. கதறிய குடும்பத்தினர்கள்; சோக சம்பவம்

காதலன் எடுத்த விபரீத முடிவால் காதலி செய்த அதிர்ச்சி செயல்.. கதறிய குடும்பத்தினர்கள்; சோக சம்பவம்

ஆந்திர மாநிலம் அருகே உள்ள சித்தூரைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் சுஜாதா.

இவர் அதே ஊரில் வசிக்கும் அவரது உறவினரான சிலம்பரசன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இவர்களின் காதலுக்கு சிலம்பரசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிலம்பரசன், கடந்த 2-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் சுஜாதாவின் பெற்றோர், சுஜாதாவை அழைத்துக்கொண்டு சித்தூரில் இருந்து குடும்பத்துடன் சென்னை ஆவடியை அடுத்த கீழ்க்கொண்டையார் அண்ணா சாலையில் உள்ள சுஜாதாவின் பாட்டி வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் மாலை சுஜாதாவின் பெற்றோர் வெளியே சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த சுஜாதா, திடீரென தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

மேலும், வீட்டுக்கு திரும்பி வந்த அவரது பெற்றோர் சுஜாதா உடல் தீயில் கருகி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், தனது காதலன் இறந்த துக்கம் தாங்காமல் சோகத்தில் இருந்து வந்த சுஜாதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் - Editor II