காதலனுடன் நெருக்கமாக ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்

காதலனுடன் நெருக்கமாக ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியைச் சேர்ந்த மைக்கேல் கோர்சலே என்பவரைக் காதலித்து வந்தார். பின்னர் அவரைப் பிரிந்தார்.

ருதி ஹாசன் தற்போது கவுஹாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற ராப்பர் பாடகரைக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. சாந்தனு ஹசாரிகா 2014 டூடுல் ஆர்ட் (Doodle Art) போட்டியில் சிறந்த டூடுல் கலைஞர் பட்டம் வென்றதாகக் கூறப்படுகிறது.

அவர் நேற்று முன்தினம் சென்னை வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இருவரும் மாஸ்க் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளனர். சமீபத்தில் ஷ்ருதி ஹாசன் தனது அப்பா கமல்ஹாசன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகியது.

தற்போது ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது எஸ்பி ஜெகந்நாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார்.


ஆசிரியர் - Editor II