விடுதி சுற்றிவளைப்பு ; ஆறு பெண்கள் உட்பட 8 பேர் கைது (காணொளி)

மின்னேரியா - கொத்தலாவலை பிரதேசத்தில் பாலியல் தொழில் இடம்பெற்றுவந்த விடுதியொன்ற பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். 

இந்த சுற்றிவளைப்பின் போது ஆறு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் உடற்பிடிப்பு நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த பெண்ணும் உள்ளடங்குகிறார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

குறித்த பெண்கள் ஜா-எல, அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மினேரியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

ஆசிரியர் - Editor II