தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே – பழனிசாமி

தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே – பழனிசாமி

கடந்த 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அ.தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

மேலும் இதன்போது, தி.மு.க. ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் இரத்து செய்தது அ.தி.மு.க. அரசுதான் என கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்விக்கு செல்வோர் விகிதமும் தமிழகத்தில்தான் அதிகம் என்றும் முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்..

இந்தியாவிலேயே தொழில் நிறுவனங்களுக்கு உகந்த மாநிலமாகவும் தமிழகம் திகழ்வதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II