மூன்றாவது டி20 போட்டி - இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

மூன்றாவது டி20 போட்டி - இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

பிரிஸ்டோலில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் தொடரையும் கைப்பற்றியது இந்தியா.

மூன்றாவது டி20 போட்டி - இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள். இதனால் இங்கிலாந்து 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் குவித்தது.

பட்லர் 34 ரன்களும், ராய் 31 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 67 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹேல்ஸ் (30) மோர்கன் (6), ஸ்டோக்ஸ் (14), பேர்ஸ்டோவ் (25) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டும், சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், சாஹர், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷிகர் தவான் விரைவில் அவுட்டாகி  அதிர்ச்சி அளித்தார்.

மறுபுறம், ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடினார். அவர் டி20 போட்டிகளில் மூன்றாவது சதமடித்து அசத்தினார். அவருக்கு கோலி ஒத்துழைப்பு கொடுத்தார்.

இறுதியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. அத்துடன் தொடரையும் 2-1 என கைப்பற்றி அசத்தியது.
ஆசிரியர் - Editor II