புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அறிவிப்பு!

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அறிவிப்பு!

புதுச்சேரியில் எதிர்வரும் ஆறாம் திகதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஆறாம் திகதிக்கு முன்னரான 48 மணிநேரத்திற்கு இந்த உத்தரவு அமுலில் இருக்குமென புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், ஆயதங்களை வைத்திருத்தல், பதாதைகள் காட்சிப்படுத்தல், கோசங்களை எழுப்புதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

எனினும், இந்த உத்தரவு வீடு வீடாக்ச சென்று மக்களைச் சந்திக்கும் வாக்குச் சேகரிப்பு முறைக்கு தடையை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஏனைய சம்பிரதாய நிகழ்வுகளுக்கு்ம 144 தடையுத்தரவு பொருந்தாது என ஆட்சியல் பூர்வா குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் - Shabesh