இனத்திற்காக மனச்சாட்சியை ஆயுதமாக்கிய பேராயரை இழந்து விட்டோம்.. அங்கஜன் தெரிவிப்பு..

இனத்திற்காக மனச்சாட்சியை ஆயுதமாக்கிய பேராயரை இழந்து விட்டோம்.. அங்கஜன் தெரிவிப்பு..
தமிழ் இனத்துக்காக தனது மனசாட்சியை எதிர்ப்பவர்கள் முன் ஆயுதமாக பயன்படுத்திய பேராயர் இராயப்பு ஜோசப் அவர்களை இழந்தமை கவலை அளிப்பதாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் மன்னார் மாவட்ட ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையில்மறைவையொட்டி வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மறைந்த ஆயர் தமிழினத்திற்காக ஆற்றிய சேவைகளை தமிழ்மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

யுத்தகாலத்தில் பட்டினியால் மக்கள் இறந்துவிடக்கூடாது என்பதற்காக களத்தில் நின்று உதவி செய்து உயிர்களை காத்த பெருமகனார்.

அதுமட்டுமல்லாது தமிழ் மக்களுடைய பிரச்சனையில் தமிழ் கட்சிகள் ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என்பதை தனது உடல் நடமாடும் வரை உறுதியாய் நின்றவர்.

இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பில் தெளிவுபடுத்துவதிலும் சர்வதேச தொடர்பாடல்களை பேணுவதிலும் உறுதியாய் நின்றவர்.

மதத்தின் பெயரால் மக்களை மாண்புறச் செய்யும் வகையில்தானும் வாழ்ந்து தனது இனத்தையும் வாழ வைத்தவர் என்ற நீதியில் அவரது இழப்பு தமிழினத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

 பிறந்த ஒவ்வொரு மனிதனும் என்று ஒரு நாள் இறப்பை சந்தித்தே தீர வேண்டும் என்பது படைத்தவன் நியதி.

ஆகவே அதன்பால் தேற்றிக் கொண்டு ஆயர் இனத்துக்காக ஆற்றிய பணிகளை  மனதில் நினைவு கூர்ந்து அதன்பால் பயணிப்போமாக என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர் - Shabesh