சிவகார்த்திகேயனின் புதிய கெட்-அப்பும் அனிருத்தின் ரிப்ளையும்

சிவகார்த்திகேயனின் புதிய கெட்-அப்பும் அனிருத்தின் ரிப்ளையும்

நடிகர் சிவகார்த்திகேயன் புதிய கெட்-அப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்கு இசையமைப்பாளரும் அவரது நண்பருமான அனிருத் ரிப்ளை செய்திருக்கிறார். 

சிவகார்த்திகேயன் ஸ்டைலிஷாக எடுத்து படம் ஒன்றை நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்டார். கோட் சூட் அணிந்து நீளமான முடி, தாடியுடன் காணப்படுகிறார். இது புதிய படத்துக்கான தோற்றமா என்று ரசிகர்கள் கேட்டதற்கு ’இல்லை. திட்டமிடாமல் திடீர் என்று நடத்திய போட்டோஷூட்’ என்று பதில் அளித்துள்ளார்.

இதற்கு இசையமைப்பாளரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான அனிருத், இந்த கெட்-அப்பில் ஒரு படம் பண்ணுவோமா? தீம் மியூசிக் ரெடி என்று ரிப்ளை செய்தார். உடனே சிவகார்த்திகேயன், ‘சார் என்ன சார் கேட்கிறீங்க... நம்ம பண்றோம் சார். ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்க போகுது நான் ரெடி சார்... நாளை வந்து சந்திக்கிறேன்... வேலையை தொடங்குவோம்’ என்று பதிவு செய்தார்.


Been sporting tis long hair&beard look for a while now & just before d haircut our #Kanaa hero @darshan991 ‘s ideas made me do tis photoshoot wit @aruntitanstudio & @anustylist mam.. thanks to them for doing tis in a short time..Tis is very new for me..hope u all will like it???????? pic.twitter.com/jQUop8vcwx


சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘சீமராஜா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது
ஆசிரியர் - Editor II