1,03,202 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன..

1,03,202 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன..
தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஓட்டுக்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 282 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அதில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 202 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன.


மாற்றுத்திறனாளிகளில் 28 ஆயிரத்து 531 விண்ணப்பங்கள் அளித்து 28 ஆயிரத்து 159 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 பேருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு 28 பேர் தபால் ஓட்டு அளித்துள்ளனர்.

மொத்தமுள்ள 4 லட்சத்து 91 ஆயிரத்து 27 தேர்தல் பணியாளர்களில் 2 லட்சத்து 592 பேர் தபால் ஓட்டுகள் அளித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் வாக்கு எண்ணும் மே 2ஆம் தேதி காலை 8 மணிக்குள் தபால் ஓட்டை அளிக்க வேண்டும்.

வாக்குப் பதிவு நாளான இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்கள், 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண்கள். 7,192 பேர் 3ஆம் பாலினத்தவர் ஆவர்.
ஆசிரியர் - Shabesh