கார்த்தியுடன் இணையும் பிரபல நடிகை

கார்த்தியுடன் இணையும் பிரபல நடிகை

கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஜோடியாக நடிக்க இருக்கிறார். 

இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவது உறுதி என விஷால் அறிவித்தார். இரண்டாம் பாகத்திற்கு முன்பு அந்த படத்தின் இயக்குனர் மித்ரன் கார்த்தியை கதாநாயகனாக்கி ஒரு படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நிவேதா பெத்துராஜ் ஒரு கதாநாயகியாக தேர்வாகி உள்ளார். சாயிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரில் ஒருவரை மற்றொரு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய படக்குழு முயற்சித்து வருகிறது. இந்தப் படத்தை தவிர நிவேதா இரண்டாவது முறையாகத் தெலுங்கில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். அவர் தெலுங்கில் அறிமுகமான ‘மென்டல் மதிலோ’ படத்தை இயக்கிய விவேக் அத்ரய்யாவே இந்தப் படத்தையும் இயக்குகிறார். ‘புரோசெவ ரெவருரா’ எனப் பெயரிடப் பட்டுள்ளது.இவை தவிர எழில் இயக்கும் ஜகஜால கில்லாடி, விஜய் ஆண்டனி நடிக்கும் திமிரு புடிச்சவன், பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடித்துவரும் நிவேதா நடித்த பார்ட்டி படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
ஆசிரியர் - Editor II