வன்கூவரில் கொவிட் விதிமுறைகளை மீறிய இரு உணவகங்களின் வணிக உரிமங்கள் இரத்து!

வன்கூவரில் கொவிட் விதிமுறைகளை மீறிய இரு உணவகங்களின் வணிக உரிமங்கள் இரத்து!
வன்கூவரில் கொவிட்-19 தொடர்பான சுகாதார உத்தரவுகளை மீறிய இரு உணவகங்களின் வணிக உரிமங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள கஸ்டோ மற்றும் கிட்சிலானோவில் உள்ள கோர்டுராய் ஆகிய இரண்டு உணவகங்களின் வணிக உரிமங்களே தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இவ்விரண்டு உணவகங்களும் மாகாண சுகாதார உத்தரவான உட்புற உணவு சேவையை அனுமதித்தாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனால், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி வரை கஸ்டோ மற்றும் கோர்டுராய் லவுஞ்ச் ஆகிய இரண்டிற்குமான வணிக உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இடைநிறுத்தக் காலத்தில் இரு வணிகங்களும் மூடப்பட வேண்டும்.
ஆசிரியர் - Shabesh