இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) காலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு சடுதியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இதன்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விரிவாக ஆராய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக்குப் பின்னர் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் முக்கியமானது என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து மத்திய அரசு கொரோனா பரவலைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவிப்புகளையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, பிரதமர் நடத்தும் ஆலோசனைக்கு பின்னர், இந்த புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசிரியர் - Shabesh