யாழ்.மாநகர பிதா மணிவண்ணன் சற்றுமுன் விடுதலை..!

யாழ்.மாநகர பிதா மணிவண்ணன் சற்றுமுன் விடுதலை..!
யாழ்.மாநகரசபை முதல்வர், சட்டத்தரணி மணிவண்ணன் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். 

யாழ்.மாநகர காவல்படை உருவாக்கம் தொடர்பில் இன்று அதிகாலை யாழ்.மாநகர முதல்வர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். 

மாநகர முதல்வரின் கைது தொடர்பாக நாடாளுமன்றிலும், நாடாளுமன்றுக்கு வெளியிலும் பல அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், தலைவர்கள் கடுமையான கண்டனத்தை தொிவித்தனர். 

மேலும் அமொிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், நாடுகளின் பிரதிநிதிகளும் குறித்த கைது தொடர்பாக தமது கவலையையும், கண்டனங்களையும் தொிவித்திருந்தனர். 

இந்நிலையில் வவுனியாவிலிருந்து இன்று மாலை யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டிருந்த மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், 

யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசேட அறையில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் தலா 2 லட்சம் பெறுமதியான 

இரு ஆள் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 
ஆசிரியர் - Shabesh