சட்டவிரோத குடியேறிகளைப் படகில் ஏற்றிவரும் இலங்கை மீனவர்கள் உடனடியாகக் கைது!

சட்டவிரோத குடியேறிகளைப் படகில் ஏற்றிவரும் இலங்கை மீனவர்கள் உடனடியாகக் கைது!

நாட்டிற்குள் சட்டவிரோத குடியேறிகளைப் படகில் ஏற்றிவரும் இலங்கை மீனவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் கடல்பகுதியின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், கடல் எல்லையின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு வெளிநாட்டவர்களுக்கு உதவி செய்யும் மீனவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என கடற்தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான அனுமதிப்பத்திரமும் இரத்துச் செய்யப்படும் எனவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Tamilan24.com

ஆசிரியர் - Editor II