கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமானால் அவ்வாறானவர்களை மாத்திரம் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II