2000 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை

2000 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 854 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஏற்கனவே 1579 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 23 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் 2,456 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 145202 ஆக அதிகரித்துள்ளது.

ஆசிரியர் - Editor II