தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் 223 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் 223 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 10,073 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மேல் மாகாணத்தை விட்டு வௌியேறிய 2,049 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறையை மீறியமை தொடர்பில் 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று (18) இரட்டை எண்கள் தினம் எனவும் அதனால் அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 0, 2, 4, 6 மற்றும் 8 ஆகிய இலக்கங்களை கொண்டவர்கள் மாத்திரமே வௌியில் செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II