நோயாளிகளை தேடி நேரடியாக வரப்போகும் ரெம்டெசிவர் மருந்து.. தமிழக அரசு தொடங்கியது இணைய சேவை!

நோயாளிகளை தேடி நேரடியாக வரப்போகும் ரெம்டெசிவர் மருந்து.. தமிழக அரசு தொடங்கியது இணைய சேவை!

தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்து முன்பதிவு செய்வதற்கான தமிழக அரசின் இணைய சேவை தொடங்கி உள்ளது. தனியார் மருத்துவமனைகள் தொற்றாளர்களின் விவரங்களோடு http://tnmsc.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் நோயாளிகளை தேடி ரெம்டெசிவிர் மருந்து வரப்போகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக போதிய அளவில் வழங்கப்பட்டு வந்தது. 

மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும், சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வந்தது. 

by TaboolaSponsored LinksYou May Like Access Netflix Globally Using This Amazing Tool TheTopFiveVPN This App Can Get You Speaking a New Language in 3 weeks  Babbel இந்த மருந்தை பல மருத்துவர்களும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்த காரணத்தால், ரெம்டெசிவிர் இருந்தால் தான் தங்கள் குடும்பத்தினர் உயிர் பிழைப்பார்கள் என்ற ந்ம்பிக்கை நோயாளிகளின் குடும்பத்தினர் மத்தியில் ஆழமாக பதிந்தது. இதன் காரணமாக மருந்தை வாங்க தினமும் ஆயிரககணக்கானோர் ரெம்டெசிவிர் மருந்து வாங்க கீழ்பாக்கத்திலும், சேலம், கோவை, திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட ஊர்களில் கால்கடுக்க நிற்க தொடங்கினர்.

Tamilan24.com

ஆசிரியர் - Editor II