இந்தியாவிலிருந்து சுவிஸ் வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

இந்தியாவிலிருந்து சுவிஸ் வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

கோவிட் வைரஸின் இந்திய உருமாறிய திரிபு பரவி வருவதை உலகில் பல நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் மற்றும் புறப்படும் விமானங்களுக்கு தடைவிதித்துள்ளன.

எனினும் சுவிட்சர்லாந்து அந்த தடையை விதிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி இந்தியாவின் உருமாறிய வைரஸ் திரிபு சுவிட்சர்லாந்தில் கண்டறியப்பட்டது.

வேறு ஒரு விமான நிலையத்தின் வழியாக வந்த பயணிகளில் இந்த திரிபு கண்டறிப்பட்டது. சுவிட்சர்லாந்தின் 90 வீதமான நோய் தொற்றுக்கு காரணமென நம்பப்படும் பிரித்தானியாவின் உருமாறிய திரிபு போல், இந்தியாவின் உருமாறிய திரிபு நாட்டிற்குள் பரவில்லை.

சுவிட்சர்லாந்தின் அயல் நாடுகளுகான ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்த வரும் விமானங்கள் தமது பிராந்தியத்திற்குள் தரையிறங்க தடைவிதித்துள்ளன.

எனினும் சுவிட்சர்லாந்து இந்த கடுமையான நடவடிக்கையை எடுக்கவில்லை. இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க உருமாறிய திரிபுகள் கண்டறியப்பட்ட பின்னர், கடந்த டிசம்பர் மாதத்தில் அந்நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டன.

இந்தியாவின் உருமாறிய திரிபு கண்டறியப்படுவதற்கு முன்னரே இந்தியா மூன்றாவது நாடுகள் பட்டியலில் இருந்தன் காரணமாக அந்நாட்டு பிரஜைகள் சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

எனினும் சுவிஸ் பிரஜைகள் மற்றும் நிரந்த குடியிருப்பாளர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சுவிஸ் பொது சுகாதார மத்திய நிலையம்,கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி இந்தியாவை அதிகம் ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் சேர்த்தது.

இந்தியாவில் இருந்து வருவோர் 10 அல்லது 7 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவில் இருந்து சுவிஸ் வரும் நபர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்த பீ.சீ.ஆர் பரிசோதனை அறிக்கையை முன்வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II