நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமலால் ஜயசேகர மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இன்று நாடாளுமன்றில்

நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமலால் ஜயசேகர மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இன்று நாடாளுமன்றில்
நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமலால் ஜயசேகர மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இன்று நாடாளுமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டதாக, நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள  முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த பின்னணியிலேயே, அவர்கள் இன்று அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 3 மாத தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இதனிடையே, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்பில் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II