மும்பையில் தொடரும் கனமழை - போக்குவரத்து முடங்கியதால் மக்கள் கடும் அவதி

மும்பையில் தொடரும் கனமழை - போக்குவரத்து முடங்கியதால் மக்கள் கடும் அவதி

மும்பையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகள், தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், போக்குவரத்து முடங்கியுள்ளது. 

மும்பையில் தொடரும் கனமழை - போக்குவரத்து முடங்கியதால் மக்கள் கடும் அவதி
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கி மக்கள் அவதியடைந்துள்ளனர். 

ஒரு வாரமாக இதே நிலை நீடித்து வருவதால் அத்தியாவசிய சேவைகளும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. மிகவும் பிரபலமான டப்பாவாலாக்கள் இன்று தங்களது வேலையை நிறுத்தி வைத்துள்ளனர். ரெயில் நிலையங்களை சூழ்ந்துள்ள மழை நீர் விரைவில் அகற்றப்படும் எனவும், படிப்படியாக ரெயில் சேவை சீரடையும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் - Shabesh