பயணத்தடை நீங்கும்போது ஒருவர் மட்டும் வெளியே செல்ல அனுமதி....

பயணத்தடை நீங்கும்போது ஒருவர் மட்டும் வெளியே செல்ல அனுமதி....
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயண கட்டுப்பாட்டை 29ம், 30ம் திகதிகளிலும் அமுல்ப்படுத்துவதா? என்பது தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை தீர்மானிக்கப்படும் என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். தற்போது உள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு குறித்த முடிவு எட்டப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதேவேளை செவ்வாய்க்கிழமை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் போது பொதுமக்கள் அருகிலுள்ள கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் - Editor II