யாழ்.பருத்தித்துறை - அல்வாய் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட நிலையில் தலைமறைவாக இருந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது..

யாழ்.பருத்தித்துறை - அல்வாய் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட நிலையில் தலைமறைவாக இருந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது..
யாழ்.வடமராட்சி அல்வாய் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட நிலையில் தலைமறைவாக இருந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் வசாவிளான் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருதாவது, கடந்த மாதம் 20ம் தகதி அல்வாய் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் வாள்வெட்டில் முடிந்த நிலையில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 4 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு 3 பேர் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் இரு பெண்கள் உட்பட 3 பேர் தேடப்பட்டுவந்த நிலையில் தலைமறைவாகியிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினால்வசாவிளான் பகுதியில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 
ஆசிரியர் - Editor II