சஜித் பிரேமதாஸவுடன் நெருங்கி பழகியவர்கள் தொடர்பில் CCTV ஊடாக கண்காணிப்பு

சஜித் பிரேமதாஸவுடன் நெருங்கி பழகியவர்கள் தொடர்பில் CCTV ஊடாக கண்காணிப்பு
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள சிசிரிவி கெமராக்கள் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனூடாக அவருடன் நெருங்கி பழகியவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கும் தன்னுடைய மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தார்.
அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் - Editor II