கொரோனா வைரஸ் பரவலை மாஸ்க் எப்படி கட்டுப்படுத்துகிறது? ஜேர்மனியின் ஆய்வாளர்கள்!

கொரோனா வைரஸ் பரவலை மாஸ்க் எப்படி கட்டுப்படுத்துகிறது? ஜேர்மனியின் ஆய்வாளர்கள்!

கொரோனா வைரஸிடமிருந்து மாஸ்க் எப்படி நம்மை பாதுகாக்கிறது என்பதை ஜேர்மன் ஆய்வாளர்களின் துல்லியமாக கண்டுபிடித்து விளக்கியுள்ளார்கள். மாஸ்குகள் எவ்வித சூழலில், எவ்வகையில் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன என்பதை துல்லியமாக கண்டுபிடித்துள்ளார்கள் அவர்கள்.

ஜேர்மனியின் Mainz நகரில் அமைந்துள்ள Max Planck வேதியியல் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பெரும்பாலான சுற்றுப்புறங்களிலும் சூழல்களிலும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஒரு சாதாரண மாஸ்க் (surgical mask) எந்த அளவு திறம்பட கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றிய ஒருவர் தும்மும்போதோ, இருமும்போதோ வெளியாகும் ஒரு சிறு துளி எச்சிலில்கூட கொரோனா வைரஸ் இருக்கும் என்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட ஒரு நிலையில், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஒரு சாதாரண மாஸ்க் மிகத்திறம்பட கொரோனா பரவலைத் தடுப்பது தெரியவந்துள்ளது என்கிறார் ஆய்வுக் குழுவின் தலைவரான Yafang Cheng.

அதே நேரத்தில் மருத்துவமனை போன்ற அதிக அபாயம் உள்ள இடங்களில் N95/FFP2 போன்ற வகை மாஸ்குகள் பயன்படுத்தப்படவேண்டும் என்று கூறும் ஆய்வாளர்கள், அப்படிப்பட்ட ஒரு சூழலில்கூட மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஒரு சாதாரண மாஸ்குகள் திறன் வாய்ந்தவையே என்கிறார்கள்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குக் கூட காலப்போக்கில் அந்த தடுப்பூசிகள் செயலிழந்துபோகும், அப்படிப்பட்ட சூழலிலும் மாஸ்குகள் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் இன்றியமையாத கருவியாக செயல்படும் என்கிறார்கள் அவர்கள்.

சொல்லப்போனால் கொரோனாவுக்கு மட்டும் என்று அல்ல, காற்றில் பரவும் பெரும்பாலான கிருமிகளிடமிருந்து மாஸ்குகள் நம்மைப் பாதுகாக்கும் என்கிறார்கள் அவர்கள். அனைவருக்கும் நல்ல தகவல்தான்!

ஆசிரியர் - Editor II