18 வயதில் இருந்து தடுப்பூசி! - ஆரம்பிக்கப்பட்டது முன்பதிவுகள்!!

18 வயதில் இருந்து தடுப்பூசி! - ஆரம்பிக்கப்பட்டது முன்பதிவுகள்!!
இம்மாத இறுதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதற்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
 
சுகாதார அமைச்சகம் இன்று வியாழக்கிழமை காலை இத்தகவலை அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட நீங்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால் இன்று முதல் உங்கள் பெயர் விபரங்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எப்படியெல்லாம் முன்பதிவு செய்யலாம்..?
 
sante fr இணையத்தளம் ஊடாகவும்,  Doctolib தளமூடாகவும், "Vite ma dose" எனும் தேடுதல் தளத்தினூடாகவும், மருத்துவமனை, உங்கள் மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் விற்பனை நிலையங்களூடாகவும் மற்றும் Covidliste  எனும் தொலைபேசி செயலியூடாகவும் உங்கள் முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும். 
 
மே 31 ஆம் திகதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று மே 26 ஆம் திகதி வரை பிரான்சில் 24,098,326  பேருக்கு ஒரு தடுப்பூசியும், 10,102,350 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
ஆசிரியர் - Editor II