மகிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாமல் ராஜபக்ச

மகிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாமல் ராஜபக்ச

மகிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை நேரம் வரும் போது முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சே அறிவிப்பார் எனவும் அதுவரையில் பொறுமையாக இருக்குமாறு மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். 


யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நாமல் ராஜபக்சே மதியம் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார். 

அதன் போது , மஹிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவா ? கோத்தாபாய ராஜபக்சவா ? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , 

எனக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வயதும் காலமும் வரவில்லை. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை நேரம் வரும் போது மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார். 

இலங்கையில் வாழும் அனைத்து இன மத மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு வேட்பாளரையே நியமிப்பார். அதுவரையில் பொறுமையாக இருங்கள் என தெரிவித்தார். 
ஆசிரியர் - Editor II