நாங்கள் தீவிரவாதிகளுடன் இணைந்து எந்த காலத்திலும் அரசியல் செய்தவர்கள் அல்ல - நாமல் ராஜபக்சே

நாங்கள் தீவிரவாதிகளுடன் இணைந்து எந்த காலத்திலும் அரசியல் செய்தவர்கள் அல்ல - நாமல் ராஜபக்சே

நாங்கள் தீவிரவாதிகளுடன் இணைந்து எந்த காலத்திலும் அரசியல் செய்தவர்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். 


யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் ,
இந்த நாட்டில் மீண்டும் யுத்தம் நடந்தால் அதில் சண்டையிட்டு உயிரிழக்க போவது இந்த நாட்டின் இளைஞர்கள் யுவதிகள் , மக்களே மீண்டும் அவ்வாறான ஒரு சூழலை உருவாக விடமுடியாது. 

நாங்கள் எக்காலத்திலும் தீவிரவாதிகளுடன் இனைந்து அரசியல் செய்ததில்லை. அவர்களை நாங்கள் எப்போதும் ஆதரித்ததும் இல்லை. 

அதனால் தீவிரவாதிகளை நாம் ஏற்போது ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை ஆதரிப்பவர்களையும் ஏற்க மாட்டோம்.  என தெரிவித்தார். 
ஆசிரியர் - Shabesh