நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து உள்ளது என நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து உள்ளது என நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து உள்ளது என 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் ,

தெற்கில் துப்பாக்கி சூடுகள் நடாத்தப்படுகின்றது. வடக்கில் வாள் வெட்டுகள் நடாத்தபடுகின்றது. ஆனால் அதனை கட்டுப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை எடுக்க வில்லை. 

கடந்த சில தினங்களுக்குள் கொழும்பில் ஆறு பேர் சுட்டுப்படுகொலை செய்யபப்ட்டு உள்ளனர். கொலையாளிகள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை..

ஆனால் பொலிஸ் ஊடக பேச்சாளர் கொலையுண்டவர்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார். அவர்களுக்கு அதனுடன் தொடர்பு இதனுடன் தொடர்பு எத்தனை வழக்கு உள்ளது என கொலையுண்டவர்கள் பற்றியே பேசுகின்றார். கொலையாளிகள் பற்றி வாயே திறக்கின்றார்கள் இல்லை. 

அதேபோலவே வடக்கில் வாள் வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்காது இருக்கின்றார்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே வடக்கில் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவென தமிழ் பொலிசாரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொண்டார். ஆனால் இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 

தெற்கில் பாதாள உலக கோஷ்டிகள் வடக்கில் வாள் வெட்டுக்குழுக்கள் இவற்றை கட்டுப்படுத்த பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பன சீர்குழைந்து உள்ளன 


ஆசிரியர் - Editor II