வடக்குக்கு அரசியல்வாதிகள் தான் போதை பொருட்களை கடத்தினார் எனும் குற்றசாட்டுக்கள்

வடக்குக்கு அரசியல்வாதிகள் தான் போதை பொருட்களை கடத்தினார் எனும் குற்றசாட்டுக்கள்

வடக்குக்கு அரசியல்வாதிகள் தான் போதை பொருட்களை கடத்தினார் எனும் குற்றசாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். 


யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது , விஜயகலா மகேஸ்வரன் , ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடும் போது வடக்குக்கு கடந்தviஆட்சி காலத்தில் அரசியல் வாதிகளின் வாகனத்தில் போதை பொருள் கடத்தப்பட்டகாவும் , மகிந்த ராஜபக்சே பணம் கொடுக்க முற்பட்டதாகவும் கூறப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர்  கேள்வி எழுப்பிய போதே  அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த ஆட்சி காலத்தில் எந்த அரசியல்வாதிகளும் வாகனத்தில் போதை பொருட்களை கடத்த வில்லை. ஆனாலும் அவரது குற்ற சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

அதேவேளை நாம் அவருக்கு பணம் கொடுக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை. அவருக்கு பணம் வழங்குவதாக எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என தெரிவித்தார். 
ஆசிரியர் - Editor II