ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாட்டு மக்களுக்கு பொய் உரைத்தே ஆட்சி அமைத்துள்ளனர்

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாட்டு மக்களுக்கு பொய் உரைத்தே ஆட்சி அமைத்துள்ளனர்
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாட்டு மக்களுக்கு பொய் உரைத்தே ஆட்சி அமைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டு மக்களுக்கு பல பொய்களை கூறியே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கூட்டு ஆட்சி அமைத்துள்ளனர். பொய் உரைத்து ஆட்சி அமைத்தவர்கள் தற்போது ஏமாற்றி வருகின்றனர். 

அவர்களின் ஏமாற்று பொய்களை மக்கள் தற்போது இனம் கண்டுள்ளனர். அதனால் தான் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் போது அதற்கு மக்கள் பதில் அளித்தனர். 

மக்கள் தற்போது தெளிவடைந்து உள்ளமையால் , மாகாண சபை தேர்தலை நடாத்தாது பிற்போட முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 

ஜனநாயக ஆட்சி முறை எனில் தேர்தல்களை உரிய நேரத்தில் நடாத்த வேண்டும். ஆனால் மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு இந்த அரசாங்கம் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. என மேலும் தெரிவித்தார். 
ஆசிரியர் - Editor II