சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார பொலிஸ்மா அதிகர் பூஜீதஜெயசுந்தர யாழிற்கு விஐயம்

சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார பொலிஸ்மா அதிகர் பூஜீதஜெயசுந்தர யாழிற்கு விஐயம்
சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார பொலிஸ்மா அதிகர் பூஜீதஜெயசுந்தர ஆகியோர் யாழ் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று யாழிற்கு விஐயம் செய்தெள்ளனர்.

இந்த விஐயத்தின் போது பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்திரையாடலிற்காக பொலிஸ் நிலையம்  வருகைதந்த அமைச்சருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

யாழில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பலராலும் குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையிலையே இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 
ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காகவே அமைச்சர் பொலிஸ்மா அதிபர் விஐயம் செய்திருக்கின்றனர்.

 இதன் போது பொலிஸ் அதிகாரிகளையும் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் வடக்கு முதலமைச்சர் மற்றும் வடக்கு ஆளுநர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.


ஆசிரியர் - Editor II