சுவிட்சர்லாந்தில் கொரோனா சான்றிதழ் விநியோகம் ஆரம்பம்!

சுவிட்சர்லாந்தில் கொரோனா சான்றிதழ் விநியோகம் ஆரம்பம்!

சுவிட்சர்லாந்தில் கொரோனா சான்றிதழ் விநியோகம் துவங்கி, முதல் சான்றிதழ் வழங்கப்பட்டாயிற்று. மின்னணு அல்லது காகித வடிவில் கிடைக்கும் இந்த கொரோனா சான்றிதழ் சர்வதேச பயணம் முதல் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும்.

கூடுதல் தகவல் என்னவென்றால், அடுத்தபடியாக ‘light’ கொரோனா சான்றிதழ் ஒன்றும் தயாராக உள்ளது. இந்த ‘light’ சான்றிதழ், சுவிட்சர்லாந்துக்குள் மட்டும் பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரவுகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் இந்த சான்றிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் சிறப்பு. பயணத்துக்கான கொரோனா சான்றிதழ் தேவையில்லையானால், அதற்கு பதில் இந்த ‘light’ சான்றிதழைப் பெற்று, தேவையானால் அதை விளையாட்டுப் போட்டிகள், உணவகங்களுக்குச் செல்லுதல் போன்ற விடயங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ‘light’ சான்றிதழ் அடுத்த மாதம் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆசிரியர் - Editor II