நயன்தாராவின் நெற்றிக்கண் பாடல் வெளியானது!

நயன்தாராவின் நெற்றிக்கண் பாடல் வெளியானது!

அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் நடித்து வரும் நயன்தாரா ஏற்கனவே கதையின் நாயகியாக நடித்து முடித்துள்ள படம் நெற்றிக்கண். இந்துஜா, அஜ்மல் முக்கிய வேடங்களில்நடித்துள்ள இப்படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இப்படம் பிளைன்ட் என்ற தென்கொரியன் படத்தின் கதையை தழுவி உருவாகியுள்ளது. இதில் கண்பார்வை இல்லாத போலீஸ் அதிகாரியாக நயன்தாரா நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.

கிரிஷ் ஜி. இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இதுவும் கடந்து போகும் என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இதையடுத்து நயன்தாராவின் ரசிகர்கள் நயன்தாரா என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரண்டிங் செய்து வருகிறார்கள்.

https://youtu.be/W6zSO7kQZNI

ஆசிரியர் - Editor II