மீண்டும் தனிமைப்படுத்தலில் பிரதமர் Jean Castex!

மீண்டும் தனிமைப்படுத்தலில் பிரதமர் Jean Castex!
பிரதமர் மீண்டும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரதமர் மாளிகையான Matignon  இல் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிரதமர் Jean Castex இற்கு நேற்று புதன்கிழமை மாலை கொரோனா பரிசோதனைகள் (PCR) மேற்கொள்ளப்பட்டது. அதில் எதிர்மறையாக (négatif ) முடிவுகளே வந்திருந்தது. 
 
இருப்பினும், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் பிரதமர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றார். அடுத்துவரும் 7 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்படுவார் என அறிய முடிகிறது. 
 
பிரதமர் தனிமைப்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். பிரதமர் Jean Castex கடந்த மார்ச் 19 ஆம் திகதி தனது முதலாவது தடுப்பூசியினை (Astra Zeneca ) போட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


ஆசிரியர் - Editor II