பிரான்சில் 14.7 மில்லியன் பேரிற்கு முழுமையடைந்த தடுப்பூசிகள்!!

பிரான்சில் 14.7 மில்லியன் பேரிற்கு முழுமையடைந்த தடுப்பூசிகள்!!

பிரான்சில் கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை ஜுன் 9ம் திகதி வரை பிரான்ஸ் ஒரு கணிசமான அளவு கொரோனத் தடுப்பு ஊசிகளைப் போட்டுள்ளது.

பிரான்சில் இதுவரை  42.100.000 அலகுகள் கொரோனத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட ஆரம்பித்த காலத்தில் இருந்து 29 மில்லியன் பேரிற்கும் அதிகமாக, துல்லியமாகக் கூறுவதாயின் 29.056.963 பேரிற்கு முதலாவது அலகுக் கொரோனாத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  இது பிரான்சின் சனத்தொகையில் 43.4 சதவீதமும், பிரான்சின் 18 வயதிற்கு மேற்பட்டோரின் சனத்தொகையில் 55.3 சதவீதமும் ஆகும்.

அதே நேரம் 14.6 மில்லியன் பேரிற்கு, துல்லியமாகக் கூறுவதாயின் 14.661.800 பேரிற்கு முழுமையான தடுப்பு ஊசிகளும் போடப்பட்டுள்ளன. இவர்களிற்கு கொரோனத் தொற்றிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கப்பட்டுள்ளது.

13.082.882 பேரிற்கு இரண்டு அலகு தடுப்பு ஊசிகளும் போடப்பட்டுள்ளன.  இது பிரான்சின் சனத்தொகையில் 19.5 சதவீதமும், பிரான்சின் 18 வயதிற்கு மேற்பட்டோரின் சனத்தொகையில் 25 சதவீதமும் ஆகும்.

முழுமையாக தடுப்பு ஊசிகள் போடப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இரண்டு தடுப்பு ஊசிகளும் போடப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வேறுபடுவதற்குக் காரணம், ஏற்கனவே கொரோனாத் தொற்று ஏற்பட்டவர்களிற்கு ஒரு அலகு கொரோனாத் தடுப்பு ஊசிகளுடன் மட்டும் அவர்களிற்கான தடுப்பு ஊசிகள் முற்றுப் பெறுகின்றன. நோய்த் தொற்று ஏற்படாதவர்களிற்கே இரண்டு அலகு ஊசிகளும் போடப்படுகின்றன.

ஆசிரியர் - Editor II