தேவையான சேதனப்பசளையை போதிய அளவில் விநியோகத்திற்கென விசேட வேலைத்திட்டம்

தேவையான சேதனப்பசளையை போதிய அளவில் விநியோகத்திற்கென விசேட வேலைத்திட்டம்

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான சேதனப்பசளையை போதிய அளவில் விநியோகத்திற்கென விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நூற்றுக்கு நூறு வீதம் சிறந்த தேசிய உணவு உற்பத்திகளை பெருக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

நச்சுத் தன்மையற்ற உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இது அமைந்துள்ளது என்று விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் சேதனப் பசளை உற்பத்தியை உள்நாட்டில் பெருக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஆசிரியர் - Editor II