புதிய காற்றழுத்தம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு!

புதிய காற்றழுத்தம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு!

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், ‘வெள்ளிக்கிழமை உருவாகவுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஜுன் மாதம் 12 ஆம் திகதி மேலும் வலுவடையவுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை.

அதேநேரத்தில் இந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். மீனவர்கள் இந்த பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II